பாவை நோன்பு

 மார்கழி உள்ளிட்ட கூதிர்கால வைகறை வேளையில் துயிலெழுந்து பெண்கள் தங்கள் இல்லத்தின் அருகேயுள்ள பிற பெண்களை எழுப்பி நீராட அழைப்பதும் தங்கள் எதிர்கால கணவன் எப்படி இருக்க வேண்டும் அதற்காகவே நோற்கும் நோன்பாகவே இஃது பார்க்கப்படுகிறது. சைவத்தில் திருவெம்பாவையும் வைணவத்தில் திருப்பாவையையும் புகழ்பெற்ற இலக்கிய வகைகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் அதிகாலை எழுவது இயல்பு அற்ற நிலை. கருமத்தால நல்லது நடந்தா சரி என்பார் விவேக் ஒரு படத்தில் அதுபோல மார்கழியில் வைகறையில் துயிலெழுதல் எது பற்றி நடந்தாலும் சரி அது நல்லதே ! 


வாடைக்காற்று சில்லென்று வீச இந்த பருவத்தில் நடப்பதும் நல்லது தான். அதனை பஜனையாக செய்ய வேண்டும் என்பதில்லை குழுவாக செல்வது நல்லது. தனியாக சென்று கள்வன் என்று நினைத்து ஊரார் தாக்குதலில் இருந்து தப்பிக்க இசைப் பாடல்கள் பாடி பஜனை செய்வதும் உண்டு. 


முதலில் பஜனை பாடுவதற்கு முன்பு குழுவாகவும் தனியாகவும் நடந்து அது நல்ல முடிவை எட்டாமல் போகவே மக்களும் அச்சமற்று இருக்கவும் மார்கழி மாத விடியலில் நடக்கவும் வேண்டும் என்று நினைத்து திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடு தான் பஜனை. 


புரட்டாசி மாத மாலையிலும் மார்கழியின் காலையிலும் இசைப்பாடல் பாடும் மரபு ஏற்பட இதுதான் காரணம் என்று நம்புகிறேன். 

Comments